
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்”.. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டம்..
வீட்டு உரிமையாளர்களுக்கு வந்த குட் நியூஸ்…!! மத்திய பட்ஜெட்டில் வெளியான வரி சலுகைகள் இதோ
அதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி நடவடிக்கைகள் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான விவாதம் கூட்டம் இன்று (25-03-2025) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கலந்து கொண்டார். மேலும், அமைதி காக்கும் சீர்திருத்தங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்தின் போது “அண்டை நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தின் சில பகுதிகளை காலி செய்யுமாறு பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டது. இதற்கு பதிலளித்த பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை தேவையற்றது’என்று நிராகரித்த அவர், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, உள்ளது, எப்போதும் இருக்கும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார்”.

























