பழைய ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்.. கடைசி வாய்ப்பு வழங்கிய அரசு..

0
???? ????? ????? ????????????????????? ??????? ???????.. ????? ???????? ??????? ????..
பழைய ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்.. கடைசி வாய்ப்பு வழங்கிய அரசு..

பழைய ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்.. கடைசி வாய்ப்பு வழங்கிய அரசு..

 

ஆதார் எண் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தனித்துவமான அடையாள ஆவணமாகும். மேலும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் மிகவும் அவசியம் என கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறுகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை அப்டேட் செய்வது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும்”.. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திட்டவட்டம்..

அதாவது, மக்கள் பொதுவாக ஆதார் எண்ணை வங்கி கணக்கு, ரேஷன் கார்டு போன்றவற்றுடன் இணைத்து வைத்திருப்பர். இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள “ஒரு நபரின் ஆதார் இயங்குகிறதா அதனை அவர் தொடர்ந்து பயன்படுத்துகிறாரா என்பதை UIDAI அமைப்பு அறிந்துகொள்ள ஆதார் புதுப்பித்தல் என்பது அவசியம்”. மேலும், உங்களது ஆதாரை புதுப்பிக்க அருகிலுள்ள இ-சேவை மையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நிரந்தர ஆதார் பதிவு மையம் மூலமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம். இதை தொடர்ந்து, ஆதார் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக டிசம்பர் 12 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக இலவசமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், வங்கிப் புத்தகம், வாக்காளர் அட்டை, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் பயன்படுத்தியும் ஆதார் எண்ணை புதுப்பித்துக் கொள்ளலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!