வீட்டு உரிமையாளர்களுக்கு வந்த குட் நியூஸ்…!! மத்திய பட்ஜெட்டில் வெளியான வரி சலுகைகள் இதோ

0
வீட்டு உரிமையாளர்களுக்கு வந்த குட் நியூஸ்...!! மத்திய பட்ஜெட்டில் வெளியான வரி சலுகைகள் இதோ
வீட்டு உரிமையாளர்களுக்கு வந்த குட் நியூஸ்...!! மத்திய பட்ஜெட்டில் வெளியான வரி சலுகைகள் இதோ

வீட்டு உரிமையாளர்களுக்கு வந்த குட் நியூஸ்…!! மத்திய பட்ஜெட்டில் வெளியான வரி சலுகைகள் இதோ

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தினார். அதில், குறிப்பாக மாத வருமானம் ரூ. 12 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் செலவழிக்கக்கூடிய பணம் அதிகரிக்கும் என்பதால், அரசுக்கு அவர்கள் செலுத்தக்கூடிய வரியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, அவர்கள் புதிய வீடு வாங்குவதை ஊக்குவிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை உத்தரவு நீட்டிப்பு…!! மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிரடி தகவல்

அடுத்ததாக, ஒருவர் இரண்டு வீடுகளுக்கு உரிமையாளராக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் மத்திய பட்ஜெட்டில் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அவர் ஒரு வீட்டில் வசித்து கொண்டு, மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டால், இரண்டாவது வீட்டிற்கு மதிப்பிடப்பட்ட  வாடகை தொகையை பொறுத்து அரசுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை இதற்கு முன்னர் இருந்தது. ஆனால், தற்போது வெளியான இந்த அறிவிப்பு வீட்டு உரிமையாளர்களுக்கு பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறைகள் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!