சிலிண்டர் வாங்குவதில் ஆப்பு வைத்த எண்ணெய் நிறுவனங்கள்..!! புதிய விதியால் சாமானியர்கள் அதிர்ச்சி..!!
தற்போதைய காலக்கட்டத்தில் நடுத்தர குடும்பங்களில் சிலிண்டரின் பயன்பாடு என்பது அத்தியாவசிமாக மாறியுள்ளது. மேலும், இது மக்களின் வேலைப்பளுவை பெரிதளவில் குறைக்கிறது. எனவே, மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு “பிரதான் மந்திரி உஜ்வால் யோஜனா” திட்டத்தின் மூலம் வீட்டு பயன்பாட்டிற்காக மானிய விலையில் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த சிலிண்டர் பெறுவதில் புதிய கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து கீழே விரிவாக காணலாம்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
அதாவது, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்கள் வேறு செயல்களுக்கு பயன்படுவதை தடுப்பதை நோக்கமாக கொண்டு இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, ஆண்டிற்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் பதியும் வாடிக்கையாளர்களுக்கு, “அன்புள்ள வாடிக்கையாளர்களே, உங்கள் சமையல் சிலிண்டர் பதிவை ஏற்க முடியாது. ஏனெனில், நீங்கள் ஆண்டு ஒதுக்கீடான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள்” என்று எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்புகிறது. மேலும், கூடுதல் சிலிண்டர்கள் வேண்டும் எனில், அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் உரிய காரணத்தை கூறி பெற்று கொள்ளலாம் என்றும் கூறுகிறது.
























