NPCIL நிறுவனத்தில் ரூ.68,697/- ஊதியத்தில் வேலை – 390+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ள 391 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
NPCIL பணியிடங்கள்:
இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வெளியான அறிவிப்பின்படி Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 391 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Scientific Assistant – B – 45 பணியிடங்கள்
- Stipendiary Trainee/Scientific Assistant (ST/SA) – Category I – 82 பணியிடங்கள்
- Stipendiary Trainee/Technician (ST/Technician) – Category II – 226 பணியிடங்கள்
- Assistant Grade – 1 (HR) – 22 பணியிடங்கள்
- Assistant Grade – 1 (F&A) – 4 பணியிடங்கள்
- Assistant Grade – 1 (C&MM) – 10 பணியிடங்கள்
- Nurse – A – 1 பணியிடம்
- Technician/C (X-Ray Technician) – 1 பணியிடம்
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Scientific Assistant – B – Diploma in Engineering (Civil / Electrical / Mechanical / Electronics / Instrumentation) / B.Sc. தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Stipendiary Trainee/Scientific Assistant (ST/SA) – Diploma in Engineering (Electrical / Mechanical / Instrumentation / Electronics) / B.Sc. (Physics / Chemistry) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Stipendiary Trainee/Technician (ST/Technician) – 10ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Assistant Grade – 1 (HR / F&A / C&MM) – Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Nurse – A – 12ம் வகுப்பு / Diploma in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Technician/C (X-Ray Technician) – 12ம் வகுப்பு / Medical Radiography தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NPCIL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
RITES நிறுவனத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.68,697/- வரை ஊதியம் வழங்கப்படும்.
NPCIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination, Personal Interview / Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























