
Champions Trophy 2025: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி… பழைய பார்முக்கு திரும்பினார் முகமது ஷமி..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமையில் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டெஸ்ட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் கடந்த பிப் 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்நிலையில் நேற்று இத்தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய இந்தியா அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
மேலும், “நேற்று (20-02-2025) துபாயில் நடந்த A பிரிவு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் டாஸ்சை வென்று முதலில் ஆடிய வங்கதேச அணி 228 ரன்களுக்கு அட்டமிழந்த நிலையில் பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 231 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளையும், பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் 101 ரன்களையும் குவித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்” என்பது குறிப்பிடத்தக்கது.























