
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் புதிய அறிவிப்பு – CTS (Non – Interview) தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது CTS (Non – Interview) தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
TNPSC ஆனது பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் Combined Technical Services Examination (Non – Interview Posts) பணிக்கென காலியாக உள்ள 654 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது 14.10.2024, 20.10.2024, 24.10.2024, 25.10.2024ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
UPSC ஆணையத்தில் CMS வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 700+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
இந்நிலையில் TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது TNPSC Combined Technical Services Examination (Non – Interview Posts) க்கான தேர்வு முடிவுகளை 20.02.2025 அன்று வெளியிட்டுள்ளது . தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

























