
TN Weather Update: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு பாரன்ஹீட்டிற்கு மேல் தாண்டியுள்ளது. இதனால் பெரும்பாலானோர் பகலில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதை தொடர்ந்து, இன்று (03-03-2025) கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
உங்களுக்கு தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லம் பற்றி தெரியுமா…?? இதுல சலுகைகள் நிறைய இருக்கு…வாங்க படிக்கலாம்
இந்நிலையில் “ஏப்ரல் 3 முதல் வரும் 5 ஆம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது”. மேலும், இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வேலையாக வெளியே செல்லும் போது கவனமாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

























