IND vs BAN 2024: 2வது T20 போட்டியில் மழை வருமா..? வெளியான வானிலை அறிக்கை!!
இந்தியா வந்துள்ள பங்களாதேஷ் ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இதை தொடர்ந்து 2வது T20 போட்டி டெல்லி அருண் நாளை (அக்டோபர் 9) இரவு 7.00 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின் படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
IRE vs SA 2024: ஃபீல்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்.. அரிய நிகழ்விற்கு என்ன காரணம்??
அதாவது அருண் ஜெட்லி மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 34 C மற்றும் குறைந்தபட்சம் 21 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 கி மீ / 11 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டி நடைபெறும் நாள் முழுவதும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிகிறது.



























