IRE vs SA 2024: ஃபீல்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்.. அரிய நிகழ்விற்கு என்ன காரணம்??
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆடவர் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று (அக்டோபர் 7) நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 284 ரன்கள் குவித்தது.
Follow our Instagram for more Latest Updates
அதன் பிறகு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி ஃபீல்டிங் செய்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடும் வெப்பத்தால் வீரர்கள் சோர்வடைந்த நிலையில், அவர் Substituteஆக களம் இறங்கினார்.


























