அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி!!
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை தொடங்கியது. அரியானாவில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்து புதிய தகவல்..!! தமிழக அரசு விளக்கம்..!!
பாஜக அரசுக்கு எதிரான விரோத மனநிலை தான் வினேஷ் போகத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


























