
என்னங்க சொல்ரீங்க…!! 175 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதுமா..? VODAFONE பயனர்களுக்கு கொண்டு வந்த புதிய ப்ரீபெய்டு திட்டம்..!!
மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் கட்டணத் தொகையை உயர்த்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், BSNL, வோடபோன் போன்ற நிறுவனங்கள் அதன் பயனர்களை அதிகரிக்க வேண்டும் என்று கட்டணத்தொகையை குறைத்து பல சலுகைகளை வழங்கி வந்தது. அந்த வகையில், தற்போது, வோடபோன் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு என்று 175 ரூபாயில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட Vi Movies & TV ஆப்ஸ் மிகப்பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது. மேலும், இந்த இயங்குதளத்தில் 17 OTT ஆப்ஸ், 350 லைவ் டிவி சேனல்கள் மற்றும் E-library-கள் உள்ளன.
2. மேலும், இவை அனைத்தும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு வெவ்வேறு சந்தா பேக்குகள் மூலம் கிடைக்கும், இதில் 10GB இலவச டேட்டாவும் வழங்கப்படும். மேலும், இதுபோன்ற தொலைத்தொடர்பு கட்டணங்களை பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

























