மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – நாளை வெளியாகும் முடிவு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - நாளை வெளியாகும் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு - நாளை வெளியாகும் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – நாளை வெளியாகும் முடிவு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி (DA) உயர்வை அளிப்பது தொடர்பாக நாளை (மார்ச்.30) நடைபெற இருக்கும் இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக நாளை அதாவது மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தவிர, நிலுவையில் உள்ள 18 மாத DA பாக்கிகள் குறித்தும் அரசு முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் 30 மார்ச் 2022 அன்று நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் 3% DA உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம்.

அது அங்கீகரிக்கப்பட்டால், மார்ச் மாதத்திற்கான ஊழியர்களின் சம்பளத்துடன், புதிய DA தொகை வரவு வைக்கப்படும். இப்போது அகவிலைப்படியில் மொத்தம் 3% அதிகரிப்பு உள்ளது. தற்போது வரை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 31 சதவீதம் DA பெறுகின்றனர். அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும். இதற்கிடையில் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) படி டிசம்பர் 2021ல் ஒரு புள்ளி குறைந்துள்ளது.

தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை!

இதன் மூலம் அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீடு 351.33 என்ற அடிப்படையில் 34.04% ஆக இருக்கிறது. அதனால் மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, இப்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022 இல் கணக்கிடப்படும். டிசம்பர் 2021க்கான AICPI-IW தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது.

நவம்பரில், இந்த எண்ணிக்கை 125.7 புள்ளிகளாக இருந்தது. மீண்டும் டிசம்பரில் 0.24% குறைந்துள்ளது. ஆனால், இது அகவிலைப்படி உயர்வை பாதிக்கவில்லை. தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 2021 இல் AICPI-IW குறியீடு 0.8% அதிகரித்து 125.7ஐ எட்டியது. இதிலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்பது தெளிவாகிறது. இப்போது டிசம்பர் 2021 இன் எண்ணிக்கையில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், ஜனவரி 2022 இல், 3 சதவிகிதம் என்ற விகிதத்தில் DA 34% ஆக அதிகரிக்கும்.

ஜூலை 2021 முதல் DA கணக்கீடு:

ஜூலை 2021 – 353 31.81%
ஆகஸ்ட் 2021 – 354 32.33%
செப்டம்பர் 2021 – 355 32.81%
நவம்பர் 2021 – 362.016 33 %
டிசம்பர் 2021 – 361.152 34%

DA மதிப்பெண்களின் கணக்கீடு:

ஜூலைக்கான கணக்கீடு- 122.8 X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான மொத்தம்- 123 X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3 X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு – 125.7 X 2.88 = 362.016
டிசம்பர் மாதத்திற்கான கணக்கீடு – 125.4 X 2.88 = 361.152

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – வலுக்கும் போராட்டம்!

34%ல் DA கணக்கீடு:

அகவிலைப்படியை 3% அதிகரித்த பிறகு, மொத்த DA 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசினால், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ.18,000
புதிய அகவிலைப்படி (34%) – ரூ.6120/மாதம்
அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ.5580/மாதம்
அகவிலைப்படி அதிகரிப்பு – 6120- 5580 = ரூ 540/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு:

பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 56900
புதிய அகவிலைப்படி (34%) – ரூ 19346/மாதம்
அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ 17639/மாதம்
அகவிலைப்படி அதிகரிப்பு – ரூ.19346-17639 = ரூ. 1,707/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!