முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-4

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-4

மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்

பிறப்பு:

 • ஜனவரி 15, 1929ல் பிறந்தார்.

மனைவி: கொரெட்டா ஸ்காட் கிங்

By Nobel Foundation (http://nobelprize.org/) [Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்பிரிக்கஅமெரிக்கத் தலைவராவார்.
 • அமெரிக்க குருமார்களில் ஒருவர்,ஆர்வலர் மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார்.
 • அவர் காந்திய வழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர்.
 • மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.
 • அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 • உன் அண்டை அயலாரையும் உன்னைப் போல் நேசி’ என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ஆற்றும் சொற்பொழிவுகள் அமைந்தன.
 • கொரெட்டா ஸ்காட் கிங் 2004 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற்றார்.
 • மார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம்.
 • அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும் வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடனப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.
[Public domain], via Wikimedia Commons

இறப்பு:

 •  ஏப்ரல் 4, 1968ல் இறந்தார்.( டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்)

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் 

பிறப்பு:

 • மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை ஏப்ரல் 4, 1855 ல் பிறந்தார்.

சிறப்பு:

 • மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.
 • இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர்  போன்ற  பல பட்டங்கள்  கிடைத்தன.
 • சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியர்  கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள்.
 • கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலஆராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
 • மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

வெளியிட்ட நூல்கள்:

 • நூற்றொகை விளக்கம் (1888)
 • மனோன்மணீயம் (நாடக நூல், 1891)
 • திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)

இறப்பு:

 • பேராசிரியர் சுந்தரம் பிள்ளை  1897 ஏப்ரல் 26(42 வயது ) அன்று மறைந்தார்.

நிலக்கண்ணிகள் குறித்த விழிப்புணர்வு நாள்

 • நிலக்கண்ணிகள் குறித்த விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 4ம் நாள் கொண்டாடப்படுகிறது.
 • நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும்.
 • பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புறங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.
 • நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!