IIT Madras-ல் Project Officer வேலை – மாத ஊதியம்: ரூ.1,50,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

IIT Madras-ல் Project Officer வேலை – மாத ஊதியம்: ரூ.1,50,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras ஆனது Project Officer, Lead பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Officer, Lead பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Officer – 2 பணியிடங்கள்
  • Lead – 1 பணியிடம்
Project Officer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Project Officer ஊதிய விவரம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Project Officer – ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Lead – ரூ.1,50,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!