தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி, நேற்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து, தற்போது பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வடமேற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்றும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!! அரசு அறிவித்த புதிய சலுகைகள் இதோ..!!
மேலும், குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காலை 10 மணிக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. குறிப்பாக, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


























