குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!! அரசு அறிவித்த புதிய சலுகைகள் இதோ..!!

0
??????? ????????????????? ??????? ???????? ?????????...!! ???? ???????? ????? ???????? ???..!!
குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு...!! அரசு அறிவித்த புதிய சலுகைகள் இதோ..!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!! அரசு அறிவித்த புதிய சலுகைகள் இதோ..!!

 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடப்பாண்டிற்கான மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதன்படி, 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 13,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது இலவச அரிசி வழங்கப்படுவதை போல, இனி கூடுதலாக 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வரும் நிதி அமைச்சருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!! ரூ. 2,00,000 வரை நிதி உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின்  சூப்பர் திட்டம்..!!

மேலும், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 நாள் முட்டை வழங்கப்பட்டு வந்தது. இது , தற்போது அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, தமிழ்நாட்டில் வழங்கப்படுவதை போல, புதுச்சேரியிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ. 1,000 நடப்பாண்டில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Our Instagram for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!