
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடக்குமா?.. மெகா நிகழ்வுக்கு வரமறுக்கும் BCCI யின் காரணம் என்ன?..
பாகிஸ்தான் நாட்டின் அரசியல் அமைதியின்மைக்கு பிறகு, 2025 சாம்பியன்ஸ் டிராபியின் ஹோஸ்டிங் உரிமையை இழக்கும் அபாயத்தில் தற்போது பாகிஸ்தான் உள்ளது. மேலும், இந்தோ-ஏசியன் நியூஸ் சர்வீஸ் (IANS) வெளியிட்ட அறிக்கையின்படி, “இஸ்லாமாபாத்தில் வன்முறை எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து நகர்த்தப்பட வாய்ப்புள்ளதாக” கூறியுள்ளது.
” நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக இருப்பேன்”.. லோக்சபா எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்பு..
இந்நிலையில் , 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நாளை (29-11-2024) முடிவு செய்ய உள்ளதாக செய்தி வெளியாகிவுள்ளது. மேலும், இதனால் பாகிஸ்தானில் ICC நடத்தவிருக்கும் மெகா நிகழ்வுக்கு இந்திய அணி வருகை தராது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்துள்ளது நிலையில், ICC hybrid model முறையில் போட்டிகளை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

























