” நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக இருப்பேன்”.. லோக்சபா எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்பு..
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட “பிரியங்கா காந்தி”, பாஜகவின் சார்பில் போட்டியிட்ட “நவ்யா ஹரிதாஸ்” மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட “சத்யன் மொகேரி” ஆகியோர் இடையே தீவிர போட்டி நிலவியது. மேலும் நடந்து முடிந்த இத்தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி இன்று (28-11-2024) மக்களவை எம்.பி.யாக பதவியேற்றார். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தியை தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபராக பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























