
இனி, வீட்டில் இருந்தே Fixed Deposit-ல் முதலீடு செய்யலாம்”..!! Airtel Thanks அப்ளிகேஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் Fixed Deposit திட்டங்களில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து லாபத்தை பெற்று வருகிறார்கள். அந்த வகையில், இனி நீங்கள் வங்கிகளுக்கு சென்று FD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யாமல், வீட்டிலிருந்தே FD திட்டத்தில் முதலீடு செய்யலாம். அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்க்கலாம்.
அதாவது, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் டிஜிட்டல் கிளையான “ஏர்டெல் பைனான்ஸ்” முதலீட்டாளர்களுக்கு ஆண்டு வட்டியாக 9.1% வழங்குகிறது. இந்த சேவைகளை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் சூர்யோதயா பேங்க், உத்கர்ஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், ஷிவாலிக் பேங்க் மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறு நிதி நிறுவனங்களோடு இணைந்து வழங்குகிறது.
1. ஏர்டெல் பைனான்ஸின் அதிகாரப்பூர்வ செயலியான “Airtel Thanks” என்பதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
2.”Fixed Deposit” ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு வேண்டிய டெபாசிட் திட்டத்தை கிளிக் செய்யவும்.
3. பெயர், வயது, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, kyc செயல்முறையை மேற்கொள்ளவும்.
4. Airtel Thanks அப்ளிகேஷன் மூலம் தொடங்கப்பட்ட FD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய உங்கள் வங்கி கணக்கை இணைத்து முதலீடு செய்ய வேண்டும்.


























Athukkenda Airtel App poganum Neradiyavey Vangi kanakkil podurom