ICC ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி உலக கோப்பை விண்வெளியில் அறிமுகம் – நிர்வாகிகள் பெருமிதம்!
அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நடைபெற இருக்கும் ஆண்களுக்கான ICC கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
உலக கோப்பை:
ஐசிசி ஆண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. மிக கோலாகலமாக நடைபெற இருக்கும் இந்த கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை அறிமுகம் யாருமே எதிர்பார்க்காத வகையில் தற்போது விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பிரத்தியேக பலூன் மீது இந்த வெற்றி கோப்பை வைக்கப்பட்டு கிட்டத்தட்ட பூமியில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் கோப்பை நிறுத்தப்பட்டு விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கணினி மயமாகும் டாஸ்மாக் கடைகள்.. இனி மது வாங்கினால் பில் – சூப்பர் அப்டேட்!
மேலும், இந்த உலகக்கோப்பை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு இறுதியாக செப்டம்பர் நான்காம் தேதி இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஐசிசி உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், தற்போது வரைக்கும் எட்டு அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இன்று 13-வது உலகக் கோப்பைக்கான போட்டி நிலவரம் குறித்தும், போட்டிக்கான அட்டவணை குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.