குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை நிர்வகிக்க நச்சுனு 5 டிப்ஸ்…!! இல்லத்தரசிகளே இது உங்களுக்கு தான்..!!

0
குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை நிர்வகிக்க நச்சுனு 5 டிப்ஸ்…!! இல்லத்தரசிகளே இது உங்களுக்கு தான்..!!

பொதுவாக ஒரு குடும்பத்தில் நிர்வாக ரீதியாக ஆண்கள் அனைவரும் பெண்களை சார்ந்து இருப்பதனால் வரவு , செலவு திட்டத்தை நிர்வகிப்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு முக்கிய சவாலாக இருந்து வருகிறது. அந்த வகையில், அவர்களுக்கு உதவும் விதமாக ஒரு குடும்பத்தின் நிதியை நிர்வகித்து, பணம் சேமிப்பதற்கான வழிமுறையை பற்றி கீழே விரிவாக பார்ப்போம்.

1. முதலில் உங்கள் செலவினங்களை வகைப்படுத்தும் விதமாக ஒரு தெளிவான பட்ஜெட்டை உருவாக்கவும். இதன் மூலம் எந்த செலவுகளை குறைக்கலாம் என்று தெளிவாக அறிய முடியும்.

நீங்கள் அதிக டீ பிரியரா..? அப்ப உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..!!

2. வாராந்திர உணவை முன்கூட்டியே திட்டமிடுவது என்பது மளிகை பொருட்கள் வாங்கும் பணத்தை சேமிக்க உதவும் மற்றும் உணவை வீணாக்காமல் தவிர்க்க முடியும்.

3. வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் மளிகை சாமான்கள் வாங்கும் போது கூப்பன் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டால் நீண்ட காலத்திற்கு பணத்தை சேமிக்க முடியும்.

4. உங்கள் வீட்டின் பயன்பாட்டு செலவுகளில் கவனமாக இருக்கவும். அதாவது, பயன்பாடில்லாத சாதனங்களை ஆப் செய்து வைப்பதன் மூலம் கரண்ட் செலவுகளை மிச்சம் பிடிக்க முடியும்.

5. அவசர காலங்கள் மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சரிசெய்வதற்காக பட்ஜெட்டிலிருந்து தனியாக பணத்தை சேமித்து வைப்பது நல்லது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!