2024 மகளிர் T20 உலகக் கோப்பை.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?? ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஐசிசி மகளிர் T20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரங்கேற உள்ளது. இந்த நிலையில் இத்தொடரின் பரிசு தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
நீங்கள் அதிக டீ பிரியரா..? அப்ப உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..!!
அதாவது இத்தொடரில் வெற்றி பெரும் அணிக்கு பரிசு தொகையாக 2.34 (19.5 கோடி) மில்லியன் டாலர் வழங்கப்படவுள்ளது. இதையடுத்து இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 1.17 (9.7 கோடி) மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் . அதே சமயம் அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு 675,000 (5.65 கோடி ) டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























