ஆதார் கார்டு விவரங்களை பாதுகாக்க மாஸ்க்டு ஆதார் – பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு விவரங்களை பாதுகாக்க மாஸ்க்டு ஆதார் - பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் கார்டு விவரங்களை பாதுகாக்க மாஸ்க்டு ஆதார் - பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் கார்டு விவரங்களை பாதுகாக்க மாஸ்க்டு ஆதார் – பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆதார் கார்டில் இருக்கும் முக்கிய விவரங்களை பாதுகாப்பதற்காக மாஸ்க்டு ஆதார் சேவை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த கார்டினை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தான தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்டு ஆதார்:

இந்திய குடிமகனின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. இத்தகைய, ஆதார் தகவல்கள் வெளியே கசிவதன் காரணமாக மட்டுமே பல்வேறு குற்றங்கள் நடைபெற காரணமாக அமைகிறது. இந்நிலையில், இந்த ஆதாரின் பாதுகாப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சார்பில் மாஸ்க்டு ஆதார் என்கிற தனி உரிமையை மேம்படுத்தும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தின் மூலமாக ஆதார் கார்டில் இருக்கும் ஆதார் எண்ணில் சில எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஆதார் கார்டினை கட்டாயமாக பகிர வேண்டிய நேரத்தில் முழு ஆதார் எண்ணுக்கு பதிலாக இதுபோன்ற மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது. தற்போது எப்படி மாஸ்க்டு ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்வது என்பதனை பார்க்கலாம்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் எச்சரிக்கை!

முதலில், ஆதார் அமைப்பின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்கிற பக்கத்திற்கு சென்று Download aadhaar என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின்னர், 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை (VID) பதிவு செய்து முழுப் பெயர், பின் குறியீடு மற்றும் பாதுகாப்புக் குறியீடு போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர், Choose your preference என்கிற பிரிவில் இருக்கும் Masked Aadhaar என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டிருக்கும் OTP ஐ பதிவிட்டால் மாஸ்க்டு ஆதாரை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!