பான் கார்டு ரத்து செய்யப்பட்டுவிட்டதா? உடனே ஆக்டிவேட் செய்யுங்க!!
பான் கார்டு ரத்தாகிவிட்டால் எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு:
பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக அமைவதற்கு ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. இதனால், பான் கார்டினை ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் பல கோடிக்கான குடிமக்களின் பான் கார்டுகள் ரத்து செய்யப்பட்டது. உங்களது பான் கார்டும் ரத்து செய்யப்பட்டு இருந்தால் மீண்டும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நவ. 25 முதல் ஆவின் பால் விற்பனை நிறுத்தம் – நிர்வாகம் விளக்கம்!
அதாவது, பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க தவறும் பட்சத்தில் பான் கார்டு ரத்து செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு ரத்து செய்யப்பட்டவர்கள் வருமான வரித்துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட aoக்கு கடிதம் அனுப்ப வேண்டும். கடிதத்துடன் முக்கிய ஆவணங்களை இணைத்து, மூன்று வருட வருமான வரி கணக்கின் நகலையும் அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதம் அனுப்பிய 10 முதல் 15 நாட்களுக்குள் உங்களது பான் கார்டு மீண்டும் ஆக்டிவேட் ஆகிவிடும்.