ரூ.2 லட்சம் FD-யில் 12 மாதம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? உடனே தெரிஞ்சுக்கோங்க!
தற்போதைய காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பங்கு சந்தை என்பது ஒரு ஒரு பொது சந்தை ஆகும். இதில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த கூறுகள் நியாயமான விலையில் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. பங்கு சந்தையானது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் 1500 க்கு மேற்பட்ட நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் செய்யப்படுகிறதாக கூறப்படுகிறது. சமீப காலமாக பங்கு சந்தை நிஃப்டி சரிந்து வருகின்றன.எனவே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை விரும்புகின்றனர்.
உங்க அக்கவுண்டில் பணம் போட போறீங்களா? இதை தெரிஞ்சுக்கிட்டு போங்க!
முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா நிலையான FD-களுக்கு நல்ல வட்டியை வழங்குகிறது. 4.25% முதல் 7.30% வரை வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பேங்க் ஆஃப் பரோடா, 12 மாதம் (1 வருடம்) நிலையான FD-களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 6.85% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.35% என்ற சற்று அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் 12 மாதங்களுக்கு ரூ.2 லட்சம் நிலையான வைப்புத் தொகையை வைத்திருந்தால், முதிர்ச்சியில் முதிர்வு நேரத்தில், வட்டி மற்றும் அசல் உட்பட மொத்தம் ரூ.2,14,056 வழங்கப்படும்.


























