உங்க அக்கவுண்டில் பணம் போட போறீங்களா? இதை தெரிஞ்சுக்கிட்டு போங்க!
வங்கியின் தற்போதைய பணப்புழக்க நிலையை கருத்தில் கொண்டு, சேமிப்பு அல்லது நடப்பு கணக்குகள் அல்லது ஒரு வைப்புத்தொகையாளரின் வேறு எந்தக் கணக்கிலிருந்தும் எந்த ஒரு தொகையையும் எடுக்க அனுமதிக்க கூடாது என்று நியூ இந்தியா கூட்டுறவு வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க, ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தை (DICGC) தொடங்கியுள்ளது.
PPF திட்டத்தில் ’15+5′ சூத்திரம் – இதுல இவ்ளோ லாபம் இருக்கா!
இந்தியாவில் செயல்படும் வங்கிகளின் கிளைகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளும் DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகை காப்பீடு வழங்கப்படுகிறது. வைப்புத்தொகை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தாலும் ரூ.5 லட்சம் மட்டுமே காப்பீடு வழங்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.5 லட்ச வரம்பிற்குள் பணத்தை வைத்திருப்பது நல்லது.

























