PPF திட்டத்தில் ’15+5′ சூத்திரம் – இதுல இவ்ளோ லாபம் இருக்கா!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான ஒரு திட்டமாகும். இந்த முதலீட்டு திட்டம் அரசின் கீழ் செயல்பட்டு வருவதால் முதலீடு மற்றும் சேமிப்புகள் அனைத்தும் ஆபத்து இல்லாதவை. ஒவ்வொரு வருடத்திலும் இரண்டு முறை பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் இந்திய அரசாங்கத்தால் மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்துக்கு ஏற்ப வருமானமும் உத்திரவாதமும் இருக்கிறது என்பதை விட சிறந்த வருவாயை பிபிஎஃப் மக்களுக்கு வழங்கி வருகிறது.
மத்திய அரசின் இலவச சமையல் சிலிண்டர் திட்டம் – விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் இதோ!
பொது வருங்கால வைப்பு நிதியின் கால அளவு 15 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், சிறப்பு விதிகளின்படி, முதலீட்டாளர் முதிர்ச்சியடைந்த பிறகு 5 ஆண்டுகளுக்கு காலத்தை நீட்டிக்க முடியும். முதலீட்டாளர்கள் PPF கணக்கின் காலத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். 20 ஆண்டுகளுக்கு இறுதி இருப்புக்கு 7.1 சதவீத வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படும்.
ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வைப்பு தொகை: 1.50 லட்சம். வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1 சதவீதம். 15 ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை: 22,50,000. 15 ஆண்டுகளில் மொத்த நிதி: 40,68,209. 20 ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை: 30,00,000 20 ஆண்டுகளில். மொத்த நிதி: 66,58,288ஆக இருக்கும்.


























