தமிழகத்தில் “இந்த” மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – காரணம் தெரியுமா?
அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா 04.03.2025 செவ்வாய்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
ரூ.2 லட்சம் FD-யில் 12 மாதம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? உடனே தெரிஞ்சுக்கோங்க!
04.03.2025ம் தேதி அன்று அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 04.03.2025 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதல் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (15.03.2025) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
























