IPL 2025: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனுக்கு முன்பு, வரும் நவம்பர் மாத இறுதியில் இத்தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளதை நாம் அறிவோம். தற்போது மெகா ஏலம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
விமான பயணத்திற்கு இதுவே அறிய வாய்ப்பு..!! குறைவான விலையில் விமான பயணம் .!!
அதாவது எதிர்வரும் மெகா ஏலத்தில் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள BCCI நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த ஏலத்தில் Right to Match விதி இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் BCCI சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் பெரும்பாலான அணிகளின் உரிமையாளர்கள் 5 முதல் 6 வீரர்களை தக்கவைக்க விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


























