UPSC அரசு வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு – ஹெல்ப்லைன் எண் அறிமுகம்!

2
UPSC அரசு வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு - ஹெல்ப்லைன் எண் அறிமுகம்!
UPSC அரசு வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு - ஹெல்ப்லைன் எண் அறிமுகம்!
UPSC அரசு வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு – ஹெல்ப்லைன் எண் அறிமுகம்!

மத்திய அரசுத் துறைகளில் வேலை தேடும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு வசதியாக புதிய கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிமுகம் செய்துள்ளது.

ஹெல்ப்லைன் எண்

இன்றைய கால கட்டத்தில் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அரசு வேலை தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிமுகம் செய்துள்ளது. இது, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் (EWS) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட சேவையாகும்.

PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ரூ.7 லட்சம் ஃப்ரீ இன்சூரன்ஸ், விவரங்கள் இதோ!

இப்போது UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒவ்வொரு விண்ணப்பதாரர்களும் 1800118711 என்ற கட்டணமில்லா எண் மூலம் தேர்வுகள் அல்லது வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஆசாடி கா அமிர்த மஹோத்ஸவ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட உள்ளது.

Post Office Gram Suraksha Yojana சேமிப்பு திட்டம் – 35 லட்சம் ரூபாய் வரை ரிட்டன்!

குறிப்பாக இந்த உதவி மையம், பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் (SC), பட்டியலினத்தை சேர்ந்த பழங்குடியினர் (ST), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் (EWS) மற்றும் பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவி மையம் அனைத்து வேலை நாட்களிலும், அலுவலக நேரங்களில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!