ஊழியர்களுக்கு மாதம், 5000 ரூபாய் ஊதிய உயர்வு..!! தமிழக அரசு முடிவு..!!

0
????????????? ?????, 5000 ?????? ???? ??????..!! ????? ???? ??????..!!
ஊழியர்களுக்கு மாதம், 5000 ரூபாய் ஊதிய உயர்வு..!! தமிழக அரசு முடிவு..!!
ஊழியர்களுக்கு மாதம், 5000 ரூபாய் ஊதிய உயர்வு..!! தமிழக அரசு முடிவு..!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கடந்த சில மாதங்களாக முன்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் சாம்சங் (SAMSUNG ) நிறுவன ஊழியர்கள் கடந்த செப்.9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில், தமிழக அரசு, சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக சாம்சங் நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது .

* அதில், நிறுவனம் மற்றும் பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

* ஒரு இடைக்கால ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும். இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை நடைமுறையில் இருக்கும். இந்த சிறப்பு ஊக்கத்தொகை 2025-26 ம் நிதியாண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. இன்று (08.10.2024) முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. கட்டணம் எவ்வளவு தெரியுமா??

* நிறுவனம் சார்பில் நடத்தப்படும் தொழிலாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் வருடத்திற்கு 4 லிருந்து 6 ஆக உயர்த்தப்படும். மேலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

* பணியில் இருக்கும் போது தொழிலாளர் மரணமடைந்தால் அவர் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்கு, ரூ.1,00,000 ரூபாய் கூடுதல் உதவித் தொகையாக வழங்கப்படும்.

* தொழிலாளரின் குழந்தை பிறப்பிற்கு 2,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். திருமணம் செய்யும் ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் மற்றும் முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் பிறப்புக்கு, தந்தையர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3-லிருந்து 5 நாட்களாக உயர்த்தப்படும் என்று SAMSUNG நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!