
கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. இன்று (08.10.2024) முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. கட்டணம் எவ்வளவு தெரியுமா??
சென்னை கதீட்ரல் சாலையில் ரூபாய். 45.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 7) திறந்துவைத்தார். கண்ணாடி மாளிகை, இசை நீரூற்று, அருவி உள்ளிட்ட அம்சங்களுடன் சுமார் 6.09 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.
கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு.. மத்திய அரசுக்கு பூம்புகார் விண்ணப்பம்!!
இந்த பூங்காவை இன்று (அக்டோபர் 8) முதல் காலை 10 மணி – இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய். 100, சிறியவர்களுக்கு ரூபாய். 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளத்தின் மூலம் நுழைவுக் கட்டண விவரம் மற்றும் நுழைவுச் சீட்டைப் பெறலாம். க்யூஆர் குறியீடு மூலமாகவும் நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























