கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு.. மத்திய அரசுக்கு பூம்புகார் விண்ணப்பம்!!
கடந்த 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கலைப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவும் கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஒரு பொது துறை நிறுவனமாக “பூம்புகார்” என்ற பெயரில் துவக்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! சந்தையில் சரிந்த பூண்டின் விலை..!!
அதாவது, தமிழ்நாடு கைத்திறன் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) பழவேற்காடு பனை ஓலை மற்றும் சில கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இந்த பனை ஓலைப் பெட்டி அடங்கிய ‘தடம்’ பெட்டியை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



























