திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்.. வெளியான தகவல்!!

0
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்.. வெளியான தகவல்!!

திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், ஆதிதிராவிடர் நலக் குழு தலைவருமான க.சுந்தரம் (76) இன்று (செப்டம்பர் 18) காலமானார். உடல்நலக்குறைவால் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. கடந்த 1996 ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்.

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..? விளக்கம் அளித்த மின்வாரிய மையம்..!!

அதுமட்டுமின்றி, கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘அண்ணா விருது’ வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!