100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா..? விளக்கம் அளித்த மின்வாரிய மையம்..!!
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தை மின் வாரியம் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில் மின்சார வாரியம் அதனை முழுமையாக மறுத்ததுள்ளது. மேலும், தற்போது வரை ஒவ்வொரு வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வரும் நிலையில் , விவசாயம், அரசு குடியிருப்பு வளாகம், வணிகம் மற்றும் தொழிற்சாலை என ஒவ்வொரு வகையான மின் இணைப்புகளுக்கும் வெவ்வேறான மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் மின்சார வாரியம் ஒரு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் ஒரே வளாகத்தில் பல மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைத்து இணைக்கப்பட்டதிலிருந்து 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!


























