தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!
தமிழகத்தில் மார்ச் மாதத்தில் தொடங்கிய வெப்பம் ஜூன் மாதம் வரை சுட்டெரிக்கும். அதன் பிறகு ஜூலை மாத பாதியில் இருந்து வெப்பம் படிப்படியாக தணிந்து காற்று வீச தொடங்கும். ஆனால் நடப்பு ஆண்டு அதற்கு மாறாக வெப்பநிலை இன்னும் குறையாமலே உள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தற்போது வெப்பநிலை 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.. 2 பேருந்துகள் மீது கல்வீச்சு.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வழக்கத்தை விட அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்கு மேக மூட்டங்கள் உருவாவதற்கான சாதகமான சூழ்நிலை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.


























