ஏப்ரல் மாதம் உணவு பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

0
ஏப்ரல் மாதம் உணவு பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் - மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

நாட்டின் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகமானது நடப்பு மாதம் கடந்த மாதங்களுக்கான உணவு பணவீக்கம் குறித்தான அதிகாரப்பூர்வ விகிதங்களை வெளியிட்டு உள்ளது.

உணவுப் பண வீக்கம்:

தேசியப் புள்ளியில் அலுவலகமானது கடந்த வாரம் நாட்டின் உணவு பிரிவின் மொத்த பண வீக்கம் மார்ச் மாதத்தில் மட்டும் 8.52 சதவீதமாக உள்ளதாகவும், இது பிப்ரவரி மாதம் 8.6 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மொத்த விற்பனை விலை பணவீக்கம் நாட்டில் எதிர்மறை அளவில் இருந்ததாகவும், நவம்பர் மாதம் முதல் நேர்மறை வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலை – கை நிறைய ஊதியம் || விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

காய்கறி, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததே உணவு பண வீக்கம் அதிகரிக்க காரணமாக உள்ளதாக வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் உணவு பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்த போதியிலும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் அளவிற்கான உணவுப் பொருட்ககளின் உற்பத்தி உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!