இனி உங்க ஓய்வூதியத்தை யுபிஐ மூலம் பெறலாம்.. EPFO அமைப்பு அமல்படுத்த உள்ள புதிய வசதி..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்பது இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அடுத்த 2-3 மாதங்களில் யூபிஐ தளங்களின் மூலம் ஓய்வூதிய தொகையை வங்கி கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை அமல்படுத்த NPCI பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் EPFO அமைப்பு, அதன் சந்தாதாரர்களுக்கான புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (27-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..
அதாவது, EPFO ஊழியர்கள் தங்களது PF கணக்கில் இருந்து பெறும் பணத்தை இனி யுனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) மூலமாக பெறும் வசதியை NPCI அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், EPF சந்தாதாரர்கள் அவர்களது வைப்பு கணக்கில் உள்ள பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த புதிய அம்சமானது ஓய்வூதிய காலங்களில், தங்கள் PF பணத்தை விரைவாக எடுக்க நினைக்கும் ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த UPI வசதி செயல்பாட்டுக்கு வந்த பிறகு, EPFO நிதி அமைப்பின் சந்தாதாரர்கள் போன்பே, கூகுள் பே, பிம், மற்றும் பேடிஎம் போன்ற டிஜிட்டல் பேமென்ட் செயலிகள் மூலம் நேரடியாக தங்களது வங்கி கணக்கில் பணம் பெற முடியும் என கூறப்படுகிறது.


























