IBPS RRB Notification 2026: தமிழ் வங்கித் தேர்வு முறை மற்றும் முக்கியத் தேதிகள்!

0

IBPS RRB ஊரக வங்கித் தேர்வுகள் 2026:
தமிழ் மொழி வினாத்தாள் அமைப்பு,
தேர்வு முறை மற்றும் முக்கியத் தேதிகள்!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக, கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் செயல்படும் பிராந்திய ஊரக வங்கிகளில் (Regional Rural Banks) காலியாக உள்ள ஆபீஸ் அசிஸ்டண்ட் (Clerk) மற்றும் ஆபீசர் ஸ்கேல்-1 (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான IBPS RRB 2026 அறிவிப்பு ஜூன் – ஜூலை மாதங்களில் வெளியாகிறது.தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கிராம வங்கியில் (Tamil Nadu Grama Bank) பணிபுரிய விரும்புபவர்கள் தங்களது தாய்மொழியான தமிழிலேயே இத்தேர்வை எழுதலாம் என்பது இதன் மிக முக்கிய அம்சமாகும்.

அதிகாரப்பூர்வ முக்கியத் தேதிகள்
(Important Dates 2026-27)

மத்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் (IBPS) அதிகாரப்பூர்வ 2026 காலண்டரின்படி தேதிகள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளன:
    • அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
      (Notification):

      ஜூன் – ஜூலை 2026 (எதிர்பார்க்கப்படுகிறது) 
    • முதனிலைத் தேர்வு தேதிகள்
      (Prelims Exam):

        • IBPS RRB PO
          (Officer Scale-I):

          2026 நவம்பர் 21 மற்றும் 22 
        • IBPS RRB Clerk (Office Assistant):
          2026 டிசம்பர் 06, 12, மற்றும் 13 

    • முதன்மைத் தேர்வு தேதிகள் (Mains Exam):
        • IBPS RRB PO (Officer Scale-I):
          2026 டிசம்பர் 20 
        • IBPS RRB Clerk (Office Assistant):
          2027 ஜனவரி 30 

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு (Eligibility)

    • கல்வித் தகுதி:
      அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் உள்ளூர் மொழியான தமிழ் பேச, எழுத, மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    • வயது வரம்பு (Age Limit):
        • ஊரக வங்கி கிளர்க் (Office Assistant):
          18 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.
        • ஊரக வங்கி அதிகாரி (Officer Scale-I / PO):
          18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
        • குறிப்பு:
          அரசு விதிகளின்படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயதில் தளர்வு உண்டு.

தேர்வு முறை (Exam Pattern – Clerk & PO)

1. முதனிலைத் தேர்வு (Preliminary Examination)
இது ஒரு தகுதித் தேர்வு மட்டுமே . மொத்தம் 80 கேள்விகள் | 80 மதிப்பெண்கள் | 45 நிமிடங்கள்.இத்தேர்வில் ஆங்கிலப் பகுதி கிடையாது.
    • Reasoning Ability (மனத்திறன்):
      40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
    • Numerical Ability / Quantitative Aptitude (கணிதம்):
      40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் 
    • நெகட்டிவ் மதிப்பெண்:
      ஒவ்வொரு தவறான விடைக்கும் 1/4 (0.25) மதிப்பெண்கள் குறைக்கப்படும் 

2. முதன்மைத் தேர்வு (Main Examination)

இதன் மதிப்பெண்கள் இறுதித் தரவரிசைக்குக் (Final Selection) கணக்கில் கொள்ளப்படும். மொத்தம் 200 கேள்விகள் | 200 மதிப்பெண்கள் | 2 மணி நேரம் 
    1. Reasoning (காரணவியல்):
      40 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்
    2. Numerical Ability (கணிதத் திறன்):
      40 கேள்விகள் – 50 மதிப்பெண்கள் 
    3. General Awareness (பொது அறிவு/வங்கி விழிப்புணர்வு):
      40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்.
    4. Language (ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது தமிழ் மொழித்திறன்):
      40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் 
    5. Computer Knowledge (கணினி அறிவு):
      40 கேள்விகள் – 20 மதிப்பெண்கள் 

தமிழ் மொழி வினாத்தாள் அமைப்பு (Language Medium)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிராந்திய மொழிக் கொள்கையின்படி, தமிழக மாணவர்கள் இத்தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதலாம்.
    • இருமொழி வினாத்தாள் (Bilingual):
      கணிதம் (Quant), ரீசனிங், மற்றும் பொது அறிவு ஆகிய பகுதிகளில் உள்ள கேள்விகள் கணினித் திரையில் ஆங்கிலத்துடன் சேர்த்துத் தமிழிலும் தோன்றும்.
    • மொழித் தாள் தேர்வு (Language Section):
      முதன்மைத் தேர்வில் (Mains) உள்ள ‘Language’ பகுதியில், ஆங்கிலத்திற்கு மாற்றாகத் தமிழ் மொழியையே (Tamil Language Section) ஒரு பாடமாகத் தேர்வு செய்து எழுதலாம். இது தமிழ் வழி மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!