
சென்னையில் வார விடுமுறை கூடுதல் பேருந்துகள் இயக்கம்…!! தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு…!
தமிழகத்தின் பெருநகரமான சென்னையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொழில் மற்றும் கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காக வசித்து வருகின்றனர். மேலும், அவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் மட்டுமே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில், வருகிற மார்ச் 1 மற்றும் 2 வார விடுமுறை நாட்கள் என்பதால் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனி உங்க ஓய்வூதியத்தை யுபிஐ மூலம் பெறலாம்.. EPFO அமைப்பு அமல்படுத்த உள்ள புதிய வசதி..
அதாவது, “சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை அன்று 245 கூடுதல் பேருந்துகள் இயக்க உள்ளதாக” தெரிவித்துள்ளது . மேலும், “வருகின்ற மார்ச் 1 சனிக்கிழமை அன்று மொத்தம் 250 கூடுதல் பேருந்துகள் 11 மாவட்டங்களுக்கு இயக்க உள்ளதாகவும்” அறிவித்துள்ளது. மேலும், “சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்க உள்ளதாக” தெரிவித்துள்ளது.

























