
மக்களுக்கு எச்சரிக்கை…நாளை (26-04-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்”..!!
நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (26-04-2025) ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஈரோடு:
கவுந்தப்பாடி, குளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

























