ரூ.5.30 ஆக உயர்ந்த முட்டை விலை – பண்டிகை கால எதிரொலி!
நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை பண்ணையாளர்கள் தற்போதைய விலை உயர்வு தொடர்பாக செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
முட்டை விலை உயர்வு:
பண்டிகை காலங்களில் அனைத்து வித அத்தியாசிய பொருட்களின் விலையும் வழக்கத்தை விட உயர்ந்து வருகிறது. வரும் நவம்பர் 12ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் என் இ சி சி முட்டை விலையை உயர்த்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 525 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை, நேற்று மேலும் ஐந்து காசுகள் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை 530 காசுகளாக உள்ளது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை பட்டியல் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!!
சில்லறை விற்பனைக்கு வரும்போது இதைவிட 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை விலை உயர்வு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தீபாவளி பண்டிகை காரணமாக முட்டை விற்பனை அதிகரித்து வருவதால் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.