தமிழகத்தில் 1.75 லட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் இது வரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் மூலமாக 1.75 லட்ச இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
ரூ.5.30 ஆக உயர்ந்த முட்டை விலை – பண்டிகை கால எதிரொலி!
அந்த வகையில், தற்போது வரையிலும் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் மூலமாக 1.75 லட்ச இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அரசின் சார்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமை சரியாக பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளும்படி இளைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.