
தமிழகத்தை மீண்டும் நோக்கி வரும் ஒரு கண்டம்…! டிசம்பர் 11ம் தேதி இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 1 வாரமாக நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, கடந்த 3 தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததை தொடர்ந்து, தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் டிசம்பர் 11ம் தேதி தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதியை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது,
இதனால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 11ம் தேதி கனமழை பெய்யும் என மக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.























