ரேஷன் கார்டில் இத்தனை வகையா? முழு விவரங்களுடன்!
மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு தரப்பு மக்கள் பயனடைந்து வருகின்றனர். மொத்தம் தமிழகத்தில் 34,773 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் 6.92 கோடி பேர் குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த ரேஷன் கார்டுகளில் பல்வேறு வகைகள் உள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள (APL) குடும்பங்களுக்கு வெள்ளை அட்டையில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (பிபிஎல்) குடும்பங்களுக்கு இளஞ்சிவப்பான இந்த பிங்க் அட்டை வழங்கப்படுகிறது. அதிகமான கோதுமை அடிப்படையிலான பொருட்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு கோதுமை ரேஷன் கார்டு அட்டை வழங்கப்படுகிறது. க்ரீன் கார்டு எனப்படும் இந்த பச்சை அட்டை அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டையானது மிக உயர்ந்த மானியங்களை வழங்குகிறது. அத்தியாவசியப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது.


























