
அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி.. ரூ.10,000 வரை போனஸ் வழங்கவிருக்கும் ஒன்றிய அரசு.. எப்போன்னு தெரியுமா..??
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 முறை மத்திய மற்றும் மாநில அரசுகள், பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை கடந்த மார்ச் 28 ஆம் தேதி உயர்த்தியது. மேலும், சந்தை விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அகவிலைப்படி மற்றும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் Group B, C, D ஊழியர்கள் விரைவில் பயனடைவார்கள் என்றும், மே மாத மூன்றாவது வாரத்தில் அகவிலைப்படி மற்றும் போனஸ் தொகை அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வின் படி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய மற்றும் நவோதயா பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்புத் துறை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ரூ.6500 முதல் ரூ.7000 வரை போனஸ் கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.


























