அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ஊக்கத்தொகை ..!! தமிழக முதல்வர் அறிவிப்பு..!!
தீபாவளி பண்டிகை இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்பட உள்ளதால், பல்வேறு மாநில அரசுகள் அதன் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அதாவது, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் C மற்றும் D பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 8,400 முதல், அதிகபட்சம் 16,800 வரை போனஸாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார் . மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

























Super opportunities