மகளிர் T20 உலகக்கோப்பை: இந்தியா சூப்பர் வெற்றி.. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து அபாரம்!!
2024 மகளிர் T20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தோல்வியும், 2வது போட்டியில் வெற்றியும் பெற்று இருந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 172/3 ரன்கள் எடுத்தது.
Follow our Instagram for more Latest Updates
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி தக்கவைத்தது. இதையடுத்து 4 வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
























