அகவிலைப்படி உயர்வு பெறுவதில் சிக்கல் – ஊழியர்கள் அவதி!!
சண்டிகர் மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு தற்போது வரையிலும் வழங்கப்படாத நிலையில் ஊழியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
அகவிலைப்படி உயர்வு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுவிட்டது. இது போக, தீபாவளி போனஸ் என ஏகப்பட்ட பரிசுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களை போல சண்டிகர் மாநில அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் இயங்க தடை போக்குவரத்து காவல்துறை உத்தரவு.. பொதுமக்கள் அவதி!
தற்போது, சண்டிகர் மாநில அரசு ஊழியர்கள் 42% அடிப்படையில் அகவிலைப்படிக்கான பலனை பெற்று வரும் நிலையில் 4% உயர்வு வழங்கி 46% ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சண்டிகர் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அகவிலைப்படி உயர்வு வழங்க முடியாது என அரசு அறிவித்துவிட்டது. இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா, இல்லையா என ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.